தமிழகத்தில் 73 கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 22 நேர்முகத்தேர்வு!
திருப்பூர் மாவட்டத்தில் 73 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு சுமார் 5600 பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கத்தால் 2 ஆண்டுகளாக TNPSC தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் வேளையில் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அரசுத் துறை காலிப்பணியிடங்கள் அதனை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் எழுத கூடிய குரூப் 2 மற்றும் 2A மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று வருகிறது.
TN Job “FB
Group” Join Now
குரூப்2 தேர்வானது மே 21ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்றும் குரூப்4&VAO தேர்வு ஜூலை 28ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 73 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த காலியிடங்களை நிரப்பும் வகையில் இதற்கு நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேர்முகத் தேர்வு ஏப்ரல் 18ம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது.
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம்!
இந்த காலிப் பணியிடங்களுக்கு சுமார் 5600 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் வரும் ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இவர்களது விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை சரிபார்க்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு உதவி இயக்குனர் தலைமை பொறுப்பேற்றார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்