வேலை தேடுபவர்களுக்கு பம்பர் ஜாக்பாட்.. மத்திய அரசில் 70,000 பணியிடங்கள் – சூப்பர் அறிவிப்பு!

0
வேலை தேடுபவர்களுக்கு பம்பர் ஜாக்பாட்.. மத்திய அரசில் 70,000 பணியிடங்கள் - சூப்பர் அறிவிப்பு!
வேலை தேடுபவர்களுக்கு பம்பர் ஜாக்பாட்.. மத்திய அரசில் 70,000 பணியிடங்கள் - சூப்பர் அறிவிப்பு!
வேலை தேடுபவர்களுக்கு பம்பர் ஜாக்பாட்.. மத்திய அரசில் 70,000 பணியிடங்கள் – சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது GD, CGL, MTS, SI, CHSL, JE, CPO உள்ளிட்ட தேர்வுகளின் கீழ் மொத்தமுள்ள 70,000 காலிப்பணியிடங்களை 2022 – 2023 ஆம் காலகட்டத்தில் நிரப்ப உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மத்திய அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது SSC (மத்திய பணியாளர் தேர்வாணையம்) துறை வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் SSC CGL பதவியில் மொத்தம் 20000 காலியிடங்கள் உள்ளதாகவும் இதற்கான தேர்வு வரும் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அடுத்தாக SSC GD தேர்வின் கீழ் 24369 காலிப் பணியிடங்கள் உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. SSC CHSL சுமார் 4000 காலியிடங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு நடைமுறை, தேர்வு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

அரசுத் துறை காலிப்பணியிடங்கள் குறித்த தவறான தகவல்கள் – புதுச்சேரி அமைச்சுப் பணியாளர் சங்கம் புகார்!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து டெல்லி காவல்துறையின் SI பதவியில் 4300 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி காவல்துறையின் PC பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் 5000 பணியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாக SSC MTS அறிவிப்பின் கீழ் 7000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 2022 – 23 ஆம் காலகட்டத்தில் மட்டும் SSC ஆனது கிட்டத்தட்ட 70,000 காலிப்பணியிடங்களுக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்யவுள்ளது. எனவே மத்திய அரசின் கீழ் வேலை செய்யவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!