தமிழக சுகாதார துறையில் 7000+ காலிப்பணியிடங்கள் – டிப்ளமோ முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

0
தமிழக சுகாதார துறையில் 7000+ காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
தமிழக சுகாதார துறையில் 7000+ காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
தமிழக சுகாதார துறையில் 7000+ காலிப்பணியிடங்கள் – டிப்ளமோ முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழகத்தில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 7000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக தமிழகத்தில் 7296 சுகாதார பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 15 மாலை 5 மணிக்குள் மாவட்ட நல்வாழ்வு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.அத்துடன் இந்த விண்ணப்பங்களை nhm.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து? அரசு பதிலளிக்க உத்தரவு!

இந்த பணியிடத்தில் மத்திய நிலை சுகாதார வழங்குநர் பதவிக்கு 4848 காலிப்பணியிடமும் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர் தரம்-II (ஆண்) பதவிக்கு 2448 காலிப்பணியிடமும் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான வயது வரம்பு அதிகபட்சமாக 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் சுகாதார பணியாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப்பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் காந்திகிராம கிராமிய நிறுவனம் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இயக்குனர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

அரசு சமூகப் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

அதனை தொடர்ந்து இடைநிலை சுகாதார பணியாளர்க்கு செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் முடித்திருக்க வேண்டும். அத்துடன் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பத்தாரர் https://nhm.tn.gov.in/en என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து ” செயலர் செயலாளர் / சுகாதார சேவைகள் துணை இயக்குநர், அந்தந்த மாவட்ட சுகாதார சங்கம்” என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர்-15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் அல்லது நேரில் சென்றும் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!