இந்திய ராணுவத்தில் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

0
இந்திய ராணுவத்தில் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
இந்திய ராணுவத்தில் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
இந்திய ராணுவத்தில் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

இந்திய ராணுவத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய மத்திய பாதுகாப்பு துறை இணையமைச்சர் 7000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் தெரிவித்தார்.

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் ஏராளமானோர் புதிய வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டு இந்திய ராணுவத்தில் 7000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Post Office: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதிக ரிட்டன்ஸ் பெறலாம் – சூப்பரான சேமிப்பு திட்டம்!!

Follow our Instagram for more Latest Updates

மக்களவையில் ராணுவ காலிப்பணியிடங்கள் குறித்து பேசிய அவர் கடந்த ஆண்டில் ராணுவ அதிகாரிகள் பணியிடங்கள் 7,665 ஆக இருந்த நிலையில் நடப்பு ஆண்டு இந்த எண்ணிக்கை 7,363 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மாலுமிகளுக்கான காலிப்பணியிடங்கள் கடந்த 2021ல் 11,749 ஆக இருந்தது.

இதனை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது இந்த எண்ணிக்கை 10,746 ஆக குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து இந்திய கடற்படையில் 386 அதிகாரிகள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதே போல விமானப்படையில் 519 அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!