Instagram பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 7 புதிய அம்சங்கள் அறிமுகம்!

0
Instagram பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 7 புதிய அம்சங்கள் அறிமுகம்!
Instagram பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 7 புதிய அம்சங்கள் அறிமுகம்!
Instagram பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 7 புதிய அம்சங்கள் அறிமுகம்!

உலகம் அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இதில் பயனாளர்களின் தேவைகளை நாளுக்கு நாள் மேம்படுத்தி கொண்டு வருகிறது. அந்த வகையில் ரீல்ஸ், ஸ்டோரிஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ள நிலையில் தற்போது புதிதாக மேலும் 7 அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம்:

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்நிறுவனம் பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 7 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சங்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஸ்கீரின் ஷேரிங் மூலம் பணத்தை திருடும் மோசடி!

அத்துடன் புதிய அம்சங்களைப் பெற விரும்புவர்கள் தங்களின் ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். மேலும் இந்த புதிய அம்சங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலாவதாக Reply while you browse என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இப்போது நாம் போஸ்ட் பார்க்கும் போது மெசேஜ் வந்தால் தனியாக இன்பாக்ஸ் சென்று ரிப்ளை செய்ய தேவையில்லை. போஸ்ட் பார்த்துகொண்டே ரிப்ளை செய்ய முடியும் இந்த புதிய அம்சம் மூலம் மெசேஜ்க்கு ரிப்ளை செய்யும்போது பேக்ரவுண்ட் அனைத்தும் பிளர் செய்யப்பட்டுவிடும்.

தற்போது மேலும் இது போன்ற அம்சங்களை விரிவாக பார்ப்போம்.

See Who’s Online

இதன் மூலம் யாரெல்லாம் இன்ஸ்டாகிராமில் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று சேட் செய்வதற்கு வசதியாக காண்பிக்கப்படும்.

Quickly send to friends

இந்த புதிய அம்சம் மூலம் ஒரு பதிவை சுலபமாக ஷேர் செய்து விட முடியும். இதில் தற்போது ஷேர் பட்டனை அழுத்தி பிடித்து கொண்டு இருந்தால் ஷேர் செய்ய வேண்டிய நபர்களின் ப்ரொஃபைல்கள் காண்பிக்கப்படும். இதில் விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்து ஷேர் செய்யலாம்.

Play, Pause and re-play

ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக்கின் உதவியுடன் தற்போது இன்ஸ்டாகிராமில் 30 நொடிகள் கொண்ட பிரிவ்வீ பாடல்களை ஷேர் செய்ய முடியும். இதில் ஸ்பாட்டிஃபையும் விரைவில் இணைக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

Keep it on the lo-fi

இன்ஸ்டாகிராம் நிறுவனம் லோஃபி சேட் தீமை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் மற்றவருடன் பேசுவது யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும்.

Create a poll with friends

இன்ஸ்டாகிராமில் தற்போது குரூப் சேட்டில் வாக்கெடுப்பதற்கான வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

Send Messages Quietly

இதன் மூலம் @Silent என்ற வார்த்தையை நீங்கள் அனுப்பும் மெசேஜ்ஜிற்கு முன் பயன்படுத்தினால் அவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் செல்லாமல் மெசேஜ் மட்டும் அனுப்பப்படும். இதனால் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!