தமிழகத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான வங்கிகளுக்கும் வரும் ஜூலை மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது விடுமுறைகள், மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறைகளும் அடங்கும்.

விடுமுறை நாட்கள்

கொரோனா 2 ஆம் அலை தாக்கம் காரணமாக ஏறத்தாழ அனைத்து மாநிலங்களுக்கும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மாநிலங்கள் தோறும் செயல்பட்டு வந்த அனைத்து துறைகளுமே மூடப்பட்ட நிலையில் பண பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்காக, வாடிக்கையாளர்களின் வசதியை கருதி வங்கிகள் குறிப்பிட்ட அளவு நேர கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே வரும் ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், 11 மாவட்டங்களில் மட்டும் – அரசு அறிவிப்பு!

பொதுவாக பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்து வங்கி நிறுவனங்களுக்கும் வார இறுதி நாட்களில் விடுமுறை கொடுக்கப்படும். அந்த அடிப்படையில் ஞாயிற்றுகிழமைகளில் மொத்தம் 4 நாட்கள் விடுமுறையும், தவிர இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். இது தவிர மற்ற பொது விடுமுறை நாட்களில் மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறை நாட்கள் என அனைத்திற்கும் வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் ஜூலை மாதம் 4, 11,18, 25 தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையும், ஜூலை 11, 24 சனிக்கிழமைகளில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 12 ஜூலை ரத யாத்திரை மற்றும் ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே, ஜூலை 13 பானு ஜெயந்தி, ஜூலை 14 ட்ருக்பா செச்சி, ஜூலை 16 ஹரேலா, ஜூலை 17 கார்ச்சி பூஜை, ஜூலை 21 பக்ரீத் ஈத் உல்-ஆதா, ஜூலை 31 கெர் பூஜா உள்ளிட்ட நாட்களில் பொது விடுமுறை காரணமாக வங்கிகள் 15 நாட்களுக்கு இயங்காது.

TN Job “FB  Group” Join Now

இவற்றில் 9 நாட்கள், மாநிலங்களுக்கான பொது விடுமுறையாகும். தமிழகத்தை பொருத்தளவு, வழக்கமான 4 ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையும், 11, 24 ஆகிய சனிக்கிழமைகளில் பொது விடுமுறை நாட்களாகும். இதை தவிர்த்து ஜூலை 21 பக்ரீத் ஈத் உல்-ஆதா சிறப்பு நாளில் அரசு விடுமுறையை முன்னிட்டு வங்கிகள் செயல்படாது. எனவே இந்த விடுமுறை நாட்களுக்கு முன்னதாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!