Post Officeல் ரூ.63,200 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
Post Officeல் ரூ.63,200 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Post Officeல் ரூ.63,200 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Post Officeல் ரூ.63,200 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழகத்தில் சில தினங்களாக அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையில் ரூ.63,200 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சூப்பரான வேலைவாய்ப்பு:

இந்திய அஞ்சல் துறை என்பது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக அதிகமானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் அதிக பாதிப்புக்கு உள்ளானர். இருப்பினும் தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 29 கார் ஓட்டுநர்(Staff Car Driver) பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – என்னென்ன வசதிகள்? முழு விபரம் இதோ!

இந்த பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.19,900 -ரூ.63,200 வரை மாத சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

IPL 2022: சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் ரசிகர்களுக்கு ஷாக் – சைமன் கட்டிச் திடீர் விலகல்!

இந்த பணிக்கு விண்ணப்பிக்க  www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதனை தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி மார்ச் 15 ஆகும்.இந்த பணிக்கான கூடுதல் விவரங்கள் அறிய www.indiapost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_12012022_MMS_Delhi_Eng.pdf என்ற இணையதளயத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here