முட்டைகோஸை எடுக்க ஆண்டுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் – சூப்பர் அறிவிப்பு!

0
முட்டைகோஸை எடுக்க ஆண்டுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் - சூப்பர் அறிவிப்பு!
முட்டைகோஸை எடுக்க ஆண்டுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் - சூப்பர் அறிவிப்பு!
முட்டைகோஸை எடுக்க ஆண்டுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் – சூப்பர் அறிவிப்பு!

இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் ஒரு விவசாய பொருட்களின் உற்பத்தி நிறுவனம், தனது நிலங்களில் விளையும் முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலியை எடுக்க ஒரு ஆண்டுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது.

லட்சக்கணக்கில் சம்பளம்

இப்போதெல்லாம் படித்த இளைஞர்களுக்கே வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. எவ்வளவு பெரிய பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருந்தாலும் அவர்களும் வேலை வாய்ப்புக்காக இன்றும் திண்டாடிக்கொண்டுள்ளனர். அதாவது படிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வர வேலை வாய்ப்புகள் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. அதிலும் கொரோனா நோய் தொற்று பலரது அன்றாட வாழ்க்கை நிலையை அடிமட்டத்துக்கு கொண்டு வந்துள்ளது.

அக்.1 முதல் ‘இந்த’ 3 வங்கிகளின் காசோலை செல்லாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்நிலையில் வயல் வெளிகளில் ப்ரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் அறுவடை செய்பவர்களுக்கு ஒரு கணிசமான தொகையை ஊதியமாக வழங்குவதாக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது இங்கிலாந்தில் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பொருட்களை வழங்கும் அஃபிர்ம், தனது தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 63 லட்சம் என்ற வகையில் ஊதியத்தை வழங்க உள்ளது. அந்த வகையில் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க, இந்த மிகப்பெரிய தொகையை சம்பளமாக வழங்க இந்நிறுவனம் புதிய விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

செப்.30 தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!

லண்டனின் லிங்கன்ஷையரில் அமைந்துள்ள T H கிளெமென்ட்ஸ் மற்றும் சன் லிமிடெட் நிறுவனம், ஆண்டு முழுவதும் வேலை செய்யும் வகையில் புதிய ஊழியர்களை தேடுவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக காய்கறி மொத்த வியாபாரம் செய்யும் இந்த நிறுவனம், ப்ரோக்கோலியை அறுவடை செய்யவும், நிலத்தில் விளையும் முட்டைக்கோஸ்களை எடுப்பதற்காகவும் ஆட்களை தேடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 30 பவுண்டுகள் செலுத்தப்படும்.

அந்த வகையில் ஒரு தொழிலாளி, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அளவில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் வேலை செய்தால், 1,200 பவுண்டுகள் வரை சம்பாதிக்க முடியும். இந்த கணக்கீடு ஒரு மாதத்திற்கு 4,800 பவுண்டுகளுடன் ஆண்டுக்கு சுமார் 62,400 பவுண்டுகள் என்ற அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 63 லட்சம் வரை இந்த ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட இருக்கிறது.

இது தவிர வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தில், ஒரு தொழிலாளியின் சம்பளம் துண்டு வேலை சார்ந்தது என்பதை அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஒரு நபர் எத்தனை காய்கறிகளை எடுக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தொழிலாளர்கள் தங்கள் வருவாயை பெறுவார்கள். இருந்தாலும் இந்த ஊதியமானது, வழக்கத்திற்கு மாறாக பழம் மற்றும் காய்கறி எடுக்கும் தொழிலில் பணியாளர்களை நியமிப்பதில் உள்ள நெருக்கடியை பிரதிபலிக்கிறது என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!