TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் உள்ள பொறியியல் பட்டதாரி மாணவர்கள் கவனத்திற்கு ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களுக்கு TNPSC சார்பில் தமிழக அரசு வேலைவாய்ப்புகளை அறிவித்து உள்ளது.

TNPSC அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைத்து வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப் 2 தேர்வுகளுக்கான நாட்களை அறிவித்து இருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க பட்டு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒரு தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC Group 2 தேர்வு அறிவிப்பு சென்ற மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து குரூப் 4 மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகளும் அறிவித்து உள்ளனர்.

TCS, Infosys, HCL & Wipro நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – அதிகரிக்கும் தேய்வு விகிதம்! காரணம் இதுதான்!

இந்த நிலையில் தற்போது பொறியியல் பட்டதாரிகளுக்கு TNPSC சார்பில் முக்கிய அறிவிப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 626 காலிப்பணியிடங்களை TNPSC சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பணியிடத்துக்கான பெயர்கள் தானியங்கிப் பொறியாளர்(மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) என்றும் சம்பளமாக மாதம்தோறும் ரூ 56,100 முதல் ரூ 2,05, 700 வரை வழங்க உள்ளது. அதனை தொடர்ந்து, இளநிலை மின் ஆய்வாளர் – 08,உதவி பொறியாளர்(வேளாண்மை பொறியியல்) – 66,உதவி பொறியாளர்(நெடுஞ்சாலைத் துறை) – 33, இயக்குநர்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) – 18,உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) – 01, உதவிபொறியாளர் (பொதுப்பணித் துறை) – 1+ 307, முதலாள் – 07 ,தொழில்நுட்ப உதவியாளர் – 11, உதவி பொறியாளர்(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) – 93 ஆகிய பணிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ExamsDaily Mobile App Download

மேலும் கல்வித்தகுதியாக, ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே மாதம் 3 ஆம் தேதி என்றும் அறிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!