தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.62,000 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.62,000 சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.62,000 சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.62,000 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அண்மையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறநிலையத்துறை வேலை:

தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத்துறை இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கோயில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வருகைக்கு பின்னர் வெளியாகாமல் இருந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது தாக்கம் குறைந்து உள்ளதால் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட 86 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

25 ஆயிரம் சம்பளத்துடன் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தில் வேலை – ஏப்ரல் 22 கடைசி நாள்!

இந்த அறிவிப்பு அடிப்படையில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ.19,500 – 62,000 வழங்கப்படும். மேலும் அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். தகுதியானவருக்கு மாத சம்பளம் ரூ.15,700 – 50,000 ஆகும். இதையடுத்து இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மேலும் மாத சம்பளம் ரூ.15,700 – 50,000 ஆகும். இதை தொடர்ந்து மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரங்கள், சிவகங்கை – 6, திருவண்ணாமலை – 5, வேலூர் – 5, கள்ளக்குறிச்சி – 7, ராமநாதபுரம் – 3, புதுக்கோட்டை-7 ஆகும்.

மேலும் மதுரை – 4, திருப்பூர் – 5, ஈரோடு- 5, காஞ்சிபுரம் – 4, சென்னை – 4, நாகப்பட்டினம் – 5, மயிலாடுதுறை – 6, திண்டுக்கல் – 2, திருச்சிராப்பள்ளி – 9, தூத்துக்குடி – 5 ஆகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது 21, 22, 25, 26, 28,29, 30 க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்கள்  அறிய https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற தளத்தில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!