6000 பேருக்கு வேலைவாய்ப்பு, புதிதாக 100 விற்பனையகங்கள் – Xiaomi அறிவிப்பு!

0
6000 பேருக்கு வேலைவாய்ப்பு, புதிதாக 100 விற்பனையகங்கள் - Xiaomi அறிவிப்பு!
6000 பேருக்கு வேலைவாய்ப்பு, புதிதாக 100 விற்பனையகங்கள் - Xiaomi அறிவிப்பு!
6000 பேருக்கு வேலைவாய்ப்பு, புதிதாக 100 விற்பனையகங்கள் – Xiaomi அறிவிப்பு!

தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனமாக மாறி வரும் Xiaomi நிறுவனம் இந்தியாவில் மேலும் 100 புதிய விற்பனையகங்களை திறக்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

ஸியோமி அறிவிப்பு:

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக மக்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் பயனராகி வருகின்றனர். அதன் காரணமாக சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மாதம் ஒரு புதிய மாடல் என ஸ்மார்ட் போன்களை லான்ச் செய்து வருகின்றனர். இதில் ஸியோமி முக்கிய பங்காற்றி வருகிறது. தொழில்நுட்பத்துறையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை தக்க வைத்திருக்கிறது Xiaomi நிறுவனம். மேலும் மொபைல் போனில் அவ்வப்போது அப்டேட்களை வழங்கி வருகிறது.

நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தற்போது விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் 100 புதிய விற்பனையகங்களை திறக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பின் தங்கிய நகரங்களில் 100 புதிய விற்பனையகங்கள் ஆரம்பித்து புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதே முக்கியம் என Xiaomi கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்டது. தற்போது 3000க்கும் அதிகமான விற்பனையகங்கள் இயங்கி வருகிறது.

அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – செப்.30ம் தேதி கடைசி நாள்!

அவ்வாறு இயக்கப்படும் 3000க்கும் மேற்பட்ட விற்பனையகங்களில் 6000க்கும் மேற்பட்டவர்கள் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ பணியாற்றி வருகின்றனர். இது குறித்து Xiaomi நிறுவனத்தின் இந்திய செயல் அதிகாரி முரளி கிருஷ்ணன் கூறியதாவது, டயர் 5 மற்றும் 6யை சேர்ந்த நகரங்களில் மேலும் 100 புதிய விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றில் ஸியோமியின் தயாரிப்புகள் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும் Xiaomi நிறுவனத்தின் ப்ராண்டான ‘MI’ லோகோ இனி வரும் பொருட்களில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here