பிரதமர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000? பதிவு செய்யும் வழிமுறைகள் இதோ!

0
பிரதமர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000? பதிவு செய்யும் வழிமுறைகள் இதோ!
பிரதமர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000? பதிவு செய்யும் வழிமுறைகள் இதோ!
பிரதமர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000? பதிவு செய்யும் வழிமுறைகள் இதோ!

மத்திய அரசின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் நாட்டில் விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எவ்வாறு பதிவு செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வேளாண் நிதியுதவி திட்டம்:

மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் விவசாய நிலம் வைத்திருப்பவர்களின் குடும்பத்திற்கு பலன் தரும் வகையில் பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் வீட்டுத் தேவைகளை எதிர்கொள்ளவும் அல்லது விவசாயத்திற்கு தேவையான சில இடுபொருட்களை வாங்கி கொள்ளவும் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அனைத்து விவசாய பயனர்களுக்கும் அரசே நிதியுதவி வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

அதன் படி ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த தொகையானது 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விருப்பமுள்ளவர்கள் எப்படி தங்களது பெயரை பதிவு செய்யலாம் என்பது குறித்த முழுவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களது பெயரை பதிவு செய்யலாம்.

மேலும் இந்த திட்டத்தில் தவறான தகவல்களை கொடுத்து இருந்தால் அல்லது நீங்கள் முறைகேடாக பதிவு செய்து இருந்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும். குடும்பத்தில் யார் ஒருவர் வருமான வரி செலுத்தியிருந்தாலும் அவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. ஒரு கணவர், மனைவி அவர்களது சிறுவயது பிள்ளைகள் என குடும்பத்தில் உள்ளவர்களில் பெயரில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் நிலம் இருந்தாலும் அவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.

எளிய வழிமுறைகள்:

  • முதலில் http://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Farmers Corner என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது New Farmer Registration என்ற லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் கிராமப்புற விவசாயியா அல்லது நகர்ப்புற விவசாயியா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து, Get OTP என்பதன் மீது கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்து சேர்ந்த ஓடிபி எண்-ஐ குறிப்பிட்டு, அடுத்தகட்டத்திற்கு செல்ல வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

  • இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், வங்கி விவரங்கள், தனி விவரங்கள் ஆகியவற்றை ஆதார் அட்டையில் உள்ளபடி குறிப்பிடுங்கள். ஆதார் ஆதண்டிகேஷன் என்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் நில ஆவண விவரங்கள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதன் பின் நீங்கள் திட்டத்தில் இணைக்கப்பட்டதற்கு அல்லது நிராகரிக்கப்பட்டதற்கான செய்தி வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here