பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு – மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!

0
பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு - மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!
பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு - மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!
பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு – மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!

இந்தியாவில் அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிரவத்தின் போது சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மகப்பேறு விடுமுறை:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின் படி பிரசவத்தின் போது 1 வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 9 மாத காலம் வழங்கப்பட்ட வந்த இந்த மகப்பேறு விடுமுறை தாய்மார்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பிறகு ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

15% கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.. தனியார் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

அண்மையில் தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் அனைத்து ஊழியர்களுக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி ஒரே மாதிரியான மகப்பேறு விடுமுறையை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பிரசவத்தின் போது தவறுதலாக குழந்தை இறந்தால் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெண் ஊழியர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் அவர்களது மனநிலையை கருத்தில் கொண்டும் இந்த வீடியோவை அரசு அறிவித்துள்ளது. பிரசவம் ஆனதிலிருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு பெற தகுதி உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!