மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!

மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 6% அகவிலைப்படி (DA) உயர்வை பெறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயர்வு அவர்களின் ஊதியத்தில் பெறும் உயர்வை ஏற்படுத்தக்கூடும்.

அகவிலைப்படி உயர்வு

தற்போது அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் இது குறித்த நல்ல செய்தியை பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடலாம் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஜூலை மாத இறுதிக்குள் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் அகவிலைப்படி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN Job “FB  Group” Join Now

ஏனென்றால், சமீபத்திய அகில இந்திய CPI-IW தரவு கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, மே மாதத்திற்கான டிஏவை நிர்ணயிப்பதில் முக்கியமான காரணியாக இருக்கும் AICP இன்டெக்ஸ், மத்திய அரசு ஊழியர்களின் DA தொகையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை சுட்டிக்காட்டுகிறது. இது குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகளை நம்பினால், ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படியில் ஆறு சதவீத உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த அகவிலைப்படி (DA) தொகை 40 சதவீதத்தை எட்டக்கூடும். அதன்படி, ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் DA உயர்வை அரசாங்கம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஹோட்டலில் வைத்து கதிரை பார்த்த ஜீவா, கதிர் நிலைமையை தெரிந்து வருத்தப்படும் தனம் – இன்றைய எபிசோட்!

குறிப்பாக, இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவை வெறும் ஊகங்கள் மட்டுமே. இதற்கிடையில் சமீபத்திய அறிக்கைகளின்படி, மே மாதத்திற்கான AICPI புள்ளிவிவரங்கள் 129 ஆக உள்ளது. இதை தொடர்ந்து அடுத்து வரும் மாதங்களுக்கான AICPI குறியீடு இதைவிட உயரும் பட்சத்தில் DA எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். அதாவது ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி 6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு மூலம் 1.16 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!