Post Office இல் சேமிக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு – 6.7% வட்டி விகிதம் வரை கிடைக்கும் சேமிப்பு திட்டம்!

0
Post Office இல் சேமிக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு - 6.7% வட்டி விகிதம் வரை கிடைக்கும் சேமிப்பு திட்டம்!
Post Office இல் சேமிக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு - 6.7% வட்டி விகிதம் வரை கிடைக்கும் சேமிப்பு திட்டம்!
Post Office இல் சேமிக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு – 6.7% வட்டி விகிதம் வரை கிடைக்கும் சேமிப்பு திட்டம்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், உச்ச வரம்பு, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி பார்க்கலாம்.

பிக்ஸட் டெபாசிட் திட்டம்

கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டதால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் சேமிக்க தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிகளவு இணைந்து பயன் பெற்று வருகின்றனர். ஏனெனில் இதில் கிடைக்கும் வட்டி தொகையானது வங்கிகளை காட்டிலும் அதிகளவு லாபத்தை தருகிறது. அத்துடன் இந்த திட்டங்களில் குறைந்த தொகையில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம் என்பதால் சாதாரண மக்கள் கூட பெருமளவு இணைகின்றனர்.

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் ஒரு கண்டிஷன் – ரஷ்ய அமைச்சர் அறிவிப்பு!

இதில் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் வழங்கப்படும் பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடுகளை செலுத்தலாம். இதில் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்சமாக தொகையாக ரூ.1000 முதல் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அத்துடன் அதிகபட்ச தொகைக்கு உச்ச வரம்பு ஏதும் கிடையாது. இதில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டியை எடுக்காவிட்டால் கூடுதல் வட்டி தொகை வழங்கப்பட மாட்டாது.

TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு – விரைவில் முடிவுகள் வெளியீடு!

இதில் முதிர்வு காலம் முடியும் முன்பாக கணக்கை முடித்து கொண்டால் குறைவான அளவில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் 5.50% வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 6.7% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் சேமிப்புதாரர் கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் முதலீடு பணத்தை திரும்ப பெற முடியாது. அதனால் நீண்ட காலம் சேமிக்க நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!