தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை!
தமிழகத்தில் 2021-22ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களால் ஆன்லைன் வழி வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்படும் வேலையில் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து கல்வி பயில வசதியில்லாத பெற்றோர்களால் ஏற்பாடு செய்ய இயலவில்லை.
ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூல் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
இதை அறிந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி தொலைக்காட்சிகளை ஏற்படுத்தி அதன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் கல்வி தொலைக்காட்சி ஏழை, எளிய மாணவர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. மேலும் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்தும் படி தொடர்ந்து பெற்றோர்களையும், மாணவர்களையும் வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்து வருகிறது. கொரோனாவால் வேலையிழந்துள்ளோம், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சவாலாக உள்ளது. அதனால் எங்களால் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
TN Job “FB
Group” Join Now
அதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் 4 லட்சம் மாணவர்கள் நடுநிலைப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்களுக்கும் சேர்ந்துள்ளனர். இதனால் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.