திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோருக்கு IRCTC மூலம் 6 நாட்களுக்கு சுற்றுலா – அறிவிப்பு வெளியீடு!

1
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோருக்கு IRCTC மூலம் 6 நாட்களுக்கு சுற்றுலா - அறிவிப்பு வெளியீடு!
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோருக்கு IRCTC மூலம் 6 நாட்களுக்கு சுற்றுலா - அறிவிப்பு வெளியீடு!
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோருக்கு IRCTC மூலம் 6 நாட்களுக்கு சுற்றுலா – அறிவிப்பு வெளியீடு!

திருப்பதி கோவிலுக்கு IRCTC மூலமாக குறைவான விலையில் 6 நாட்கள் சுற்றுலா செல்லும்படியான அருமையான திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், அது குறித்தான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு சுற்றுலா

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் குடும்பமாக ஆன்மீக சுற்றுலா செல்வதுண்டு. அதிலும், வார இறுதி நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வருகிறது. அதாவது, 10 மணி நேரங்கள் கூட நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில், தற்போது இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான IRCTC திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாவட்ட சமூக நலத்துறை வேலைவாய்ப்பு – 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் !

மேலும், ஆண்டுதோறும் சில சிறப்பான தினங்களில் மட்டும் இந்திய ரயில்வே நிர்வாகம் திருப்பதிக்கு சுற்றுலா செல்லும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்நிலையில் IRCTC ஆறு நாட்களுக்கு திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும்படியான திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. முதலில், பீகார் மாநிலம் பாகல்பூரில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக பயணம் செல்லும் ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு திருப்பதியை வந்தடைகிறது.

அதாவது, திருப்பதிக்கு சென்றதும் முதலில் அங்குள்ள ஒரு ஹோட்டலில் செக் இன் செய்து காலை உணவை முடிப்பார்கள். பின்பு, அங்கிருந்து திருமலைக்கு அழைத்து செல்வார்கள். மேலும், அடுத்த நாள் காலை ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் பத்மாவதி தேவி கோயில்களுக்கு அழைத்து செல்வார்கள். இந்த தரிசனத்தை முடித்த பின்பு ரயில் இரவு 19:58 மணிக்கு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாகல்பூருக்கு செல்லும். ஏசி டிக்கெட்டுகள், மூன்று வேளை உணவு, நகருக்குள் போக்குவரத்து மற்றும் ஹோட்டலில் தங்கும் வசதி ஆகிய அனைத்திற்கும் மொத்தமாக ரூ.14,170 கட்டணம் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. மேலும், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பயண தேதியை முடிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இந்த விளம்பரத்தை பகல்பூரில் அவர்களுக்கான மொழியில் பதிவிட வேண்டும். பகல்பூரில் தமிழ் படித்து புரிந்து கொள்ள மாட்டார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!