6 நாட்கள் நீண்ட வார இறுதி விடுமுறைகள் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
நமது நாட்டின் அண்டை நாடான சிங்கப்பூரில் அடுத்த ஆண்டுக்கான நீண்ட இறுதி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு விடுமுறைகள்:
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவல் கடந்த இரு ஆண்டுகளாக அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை குறைய ஆரம்பித்ததால் அனைத்து நாடுகளும் ஓரளவு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 22 முகாம் அறிவிப்பு!
இந்த நிலையில் அனைத்து உலக நாடுகளிலும் சென்ற ஆண்டு இறுதியில் இருந்து பல்வேறு விழாக்கள் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது சிங்கப்பூர் நாட்டிற்கான அடுத்த ஆண்டு ஆறு நீண்ட வார இறுதி விடுமுறைகளை இருக்கலாம் என்று அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் மொத்தமுள்ள 11 பொது விடுமுறை நாட்களில் மொத்தம் ஏழு என்றும் தெரிவித்து உள்ளனர்.
ExamsDaily Mobile App Download
சிங்கப்பூர் நாட்டில் விடுமுறை அறிவித்து உள்ள நாட்கள், இந்த ஆண்டின் புத்தாண்டு தினமான (ஜனவரி 1), அடுத்தாக தீபாவளி திருநாள் (நவம்பர் 12) அன்றும், சீனப் புத்தாண்டின் முதல் இரண்டு நாட்கள் (ஜனவரி 22,23) ஞாயிறு, திங்களில் வருவதால் ஜனவரி 24 செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை நாள். இதனால் ஜனவரி 21 முதல் 4 நாட்கள் விடுமுறையாக அமையும். அதனை தொடர்ந்து, ஏப்ரல் 7ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் இந்த வார இறுதியில் மூன்று நாள் விடுமுறை. மே 1 ஆம் தேதி மே தினமும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினமும் திங்கட்கிழமைகளில் வருவதால் இந்த வார இறுதிகளில் மூன்று நாள் விடுமுறை என்றும் அறிவித்து உள்ளது. அதனால் நாட்டு மக்கள் பெரிதும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.