இந்தியாவில் செப்.23 ஆம் தேதி முதல் செப்.30 வரை 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு!
இந்தியாவில் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் செப். 30 ஆம் தேதி வரை 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வங்கிகள் விடுமுறை:
இந்தியாவில் செப்டம்பர் மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் பல விடுமுறை நாட்கள் இருக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் செப்.22ம் தேதி நாராயண குரு சமாதி தினத்தையொட்டி கொச்சி, பனாஜி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
Follow our Instagram for more Latest Updates
அதே போல செப் 23 ஆம் தேதி (இன்று) நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை. மேலும் செப் 24 ஆம் தேதி ஞாயிறு, வாராந்திர விடுமுறை, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். செப் 25 ஆம் தேதி ஸ்ரீமந்த சங்கர்தேவ் பிறந்தநாளை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை. செப்டம்பர் 27 ஆம் தேதி மிலாட்-இ-ஷரீப், ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் விடுமுறை.
TNDTE COA 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!
செப் 28ம் தேதி ஈத்-இ-மிலாத் காரணமாக அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, டேராடூன், தெலுங்கானா, இம்பால், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி ஆகிய இடங்களில் வங்கி விடுமுறை. செப்.29 ஆம் தேதி ஈத்-இ-மிலாத்-உன்-நபி, காங்டாக், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் விடுமுறை ஆகும்.