6 பந்தில் 6 விக்கெட்.. ஆஸ்திரேலிய வீரர் சாதனை பவுலிங்!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் விக்கெட் எடுத்து சாதனையை படைத்துள்ளார்.
சாதனை நிகழ்வு:
தொழில்முறை கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் நீல் வாகனர் தனது ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். இதே போல் வங்கதேசத்தை சேர்ந்த அல் அமீன் ஹுசைன் மற்றும் இந்தியாவின் அமிமன்யு மிதுன் இருவரும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவில் மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
ரூ.1,000 முதலீட்டில் ரூ.15 லட்சம் லாபம் – SBI ன் திட்டம் தான் பெஸ்ட் சாய்ஸ்!
அதில் சனிக்கிழமை முட்கீரபா நெராங்கா அணி சர்பஸ் பாரடைஸ் அணியுடன் மோதியது. முதலில் களம் இறங்கிய முட்கீரபா நெராங்கா அணி 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் இலக்குடன் சர்பஸ் பாரடைஸ் அணி இறங்கியது. 40 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் பாரடைஸ் அணி 39 ஓவரில் நாலு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரை வீசிய மோர்கன் 6 பந்துகளில் ஆறு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதில் முதல் நான்கு பந்துகளில் கேட்ச் மூலமாகவும், கடைசி இரண்டு பந்துகளில் போல்ட் மூலமாகவும் வீரர்களை வீழ்த்தியுள்ளார். மேலும் அந்த போட்டியையும் முட்கீரபா நெராங்கா அணி வென்றது.