தயிர் & லஸ்ஸிக்கும் 5% வரி விதிப்பு – மத்திய GST கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

0
தயிர் & லஸ்ஸிக்கும் 5% வரி விதிப்பு - மத்திய GST கவுன்சில் கூட்டத்தில் முடிவு!
தயிர் & லஸ்ஸிக்கும் 5% வரி விதிப்பு - மத்திய GST கவுன்சில் கூட்டத்தில் முடிவு!
தயிர் & லஸ்ஸிக்கும் 5% வரி விதிப்பு – மத்திய GST கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (ஜூன் 28) நடைபெற்ற GST கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட்டில் விற்கப்படும் தயிர், லஸ்ஸி ஆகியவற்றுக்கு 5% வரி விதிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு:

இந்தியாவில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு நடத்தப்படும் 47வது GST கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நேற்று (ஜூன் 28) துவங்கியது. இந்த கூட்டத்தில் பாக்கெட்டில் விற்கப்படும் தயிர், லஸ்ஸி ஆகியவற்றுக்கு 5% GST வரி விதிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு தற்போது GST கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது GST கவுன்சில் கூட்டம் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் பரிந்துரைத்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் குடியிருப்பு பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய்க்கு குறைவான ஹோட்டல் அறை வாடகை உள்ளிட்ட சில குறிப்பிட்ட சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை ரத்து செய்வது குறித்த பரிந்துரைக்கு முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டி விற்கப்படும் தயிர், லஸ்ஸி உள்ளிட்ட குளிர் பானங்கள் மீது 5% GST வரி விதிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழக தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இது தவிர GST கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் நடத்தப்படும் சூதாட்டம், குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிப்பது குறித்தும் அரசுக்கு பல மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளன. அதே நேரத்தில் ஜிஎஸ்டி அறிமுகத்தால் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் வருவாய் இழப்பீடு காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here