5ஜி பயனாளர்களுக்கு இணைய வசதி இந்த வேகத்தில் தான் கிடைக்கும்! நிபுணர்களின் ஷாக்கிங் தகவல்!

0
5ஜி பயனாளர்களுக்கு இணைய வசதி இந்த வேகத்தில் தான் கிடைக்கும்! நிபுணர்களின் ஷாக்கிங் தகவல்!
5ஜி பயனாளர்களுக்கு இணைய வசதி இந்த வேகத்தில் தான் கிடைக்கும்! நிபுணர்களின் ஷாக்கிங் தகவல்!
5ஜி பயனாளர்களுக்கு இணைய வசதி இந்த வேகத்தில் தான் கிடைக்கும்! நிபுணர்களின் ஷாக்கிங் தகவல்!

இந்தியாவில் 5ஜி நெட் ஒர்க் சேவை கடந்த 1ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த 5 ஜி குறித்த முக்கிய தகவல்களை நிபுணர்கள் பகிர்ந்துள்ளனர். அது என்னவென்று இப்பதிவில் காண்போம்.

5 ஜி இணைய சேவை:

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 5 ஜி ஏலம் நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 1ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் 5 ஜி சேவையை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த 5 ஜி இணையசேவை சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது குறிப்பிட்ட நகங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தபடுகிறது. கால போக்கில் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசின் BSNL தொலைத்தொடர்பு நிறுவனம் அடுத்த ஆண்டு 5 ஜி சேவையை தொடங்கும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர், ‘அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் 90 சதவீத பகுதிகளுக்கு 5-ஜி சேவை விரிவுப்படுத்தப்படும். இந்த 5 ஜி தற்போது பயன்பாட்டில் உள்ள 4 ஜியை விட அதி வேகத்தில் இருக்கும் .நல்ல அனுபவங்களை பயனர்களுக்கு அளிக்கும் என்று தெரிவித்தார். மேலும் தற்போது இந்த 5 ஜி மூலம் இணைய பயனாளர்களுக்கு 600 Mbps வேகத்தில் இணைய வசதி கிடைக்கும். இதன் மூலம் கணினியின் வேகத்தில் செல்போன்களை இயக்க முடியும் என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download

மேலும் 5 ஜி மூலம் ஒரு வீடியோவை வேகமாக பதிவிறக்கம் செய்யலாம். அத்துடன் தரவுகளை நொடியில் அனுப்பும் வசதியையும் பெறலாம். இந்த நிலையில் முன்னணி நெட் ஒர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி போன்ற 4 முக்கிய நகரங்களில் நேற்று முதல் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!