இந்தியாவின் 13 நகரங்களில் 5G சேவை துவக்கம் – அறிவிப்பு வெளியீடு!

1
இந்தியாவின் 13 நகரங்களில் 5G சேவை துவக்கம் - அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவின் 13 நகரங்களில் 5G சேவை துவக்கம் - அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவின் 13 நகரங்களில் 5G சேவை துவக்கம் – அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், 5G சேவையை முதற்கட்டமாக 13 நகரங்களில் வெளியிடப்பட திட்டமிட்டுள்ளது. தற்போது எந்தெந்த நகரங்களில் 5G சேவை வெளியாகவுள்ளது என்பதற்கான பட்டியலும் வெளியாகியுள்ளது.

5G சேவை

நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் தான் கடும் போட்டிகளுக்கு நடுவே 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி சேவையை தனக்கு சொந்தமாக்கியுள்ளது. மேலும், நாட்டில் எப்போது 5ஜி சேவை அறிமுகமாகும் என பலரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், 5ஜி ஜியோ போனும் வரையறுக்கப்பட்ட டேட்டா வசதி மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்தகைய வசதிகளை கொண்ட ஜியோ போன் 5ஜியின் விலை ரூ.12,000 இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) தொடக்க விழாவின் போது செப்டம்பர் 29 ஆம் தேதி இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 5G சேவையை அறிமுகம் செய்வது தொடர்பான வருடாந்திர பொதுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி முகேஷ் அம்பானி தலைமையில் நடைபெற இருக்கிறது. மேலும், முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மட்டும் 5G சேவையை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இரயில்வே துறையில் வேலை – எந்த டிகிரி படிச்சிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!

மேலும், 1,000 இந்திய நகரங்களில் 5G கவரேஜ் திட்டம் முடிந்துவிட்டதாகவும் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்டமாக புது தில்லி, சண்டிகர், குருகிராம், மும்பை, காந்திநகர், அகமதாபாத், ஜாம்நகர், புனே, லக்னோ, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் தான் 5G சேவை தொடங்கவுள்ளது. அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து நகரங்களிலும் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. தன் பொண்டாட்டி யை வாழா வெட்டி ஆக்கி விட்டு விட்டு, ஊரான் பொண்டாட்டிக்கு கறியும் சோறும் ஊட்டி விட்ட மாதிரி, BSNL க்கு 4G அனுமதி தரவில்லை. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு 5G தரப் போகிறார்களாம் . மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டமைப்பு களை தனியாருக்கு தாரை வார்ப்பது சரியல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!