இந்தியாவில் செப்டம்பர் முதல் 5ஜி சேவை – 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

0
இந்தியாவில் செப்டம்பர் முதல் 5ஜி சேவை - 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!
இந்தியாவில் செப்டம்பர் முதல் 5ஜி சேவை - 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!
இந்தியாவில் செப்டம்பர் முதல் 5ஜி சேவை – 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும். இதன் மூலம் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 5ஜி சேவைக்காக 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி சேவை:

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் முதன் முதலில் 2ஜி சேவை தொடங்கப்பட்டது. இதில் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றது. அதனால் 2 ஜி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் இணையத்தின் தேவை அதிகரித்தால் அடுத்த கட்டமாக 3G சேவை உருவானது. 2 ஜியை காட்டிலும் 3 ஜியில் வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்ட அதிக சிறப்பம்சங்கள் இடம் பெற்றது. தற்போது 4 ஜி வரை நாம் பயன்படுத்தி வருகிறோம். பல நாடுகளில் 5ஜி சேவையும் வந்து விட்டது.

OLA Electric Scooter முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு – 5 நகரங்களில் புதிய அறிமுகம்!

மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் 2022 செப்டம்பர், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் 5G சேவை தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் சிறப்பாகவும், குறைந்த செலவில் சிறந்த தரமாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார். முதல்கட்டமாக இந்தியாவின் 13 நகரங்களில் 5 ஜி சேவையை தொடங்கும் என்று TRAI தலைவர் பிடி வகேலா தெரிவித்தார். அதன் பிறகு படிப்படியாக பிற பகுதிகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் பாரத் நெட் முதல் விண்வெளி தொடர்பு மற்றும் 5ஜி முதல் நிலையான லைன் பிராட்பேண்ட் சேவைகள் வரையிலான துறைகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இன்னும் மிக குறைவாக உள்ள பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த 5ஜி, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பப் பணிகளில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான நிபுணர்களின் தேவை இருப்பதாக டெலிகாம் துறை திறன் கவுன்சில் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!