
குட் நியூஸ்.. இந்தியாவில் 13 நகரங்களில் மாஸாக வரவிருக்கும் 5ஜி சேவை – மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!
நாட்டில் 5ஜி சேவைகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மேலும் கூடுதலான தகவல்களை தெரிவித்துள்ளார்.
5ஜி சேவை
இந்திய நாட்டில் தற்போது 4ஜி நெட்வொர்க் சேவைகள் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி கிடைக்கிறது. இதையடுத்து 5ஜி சேவைகள் நாட்டில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த 5ஜி சேவைகள் பயன்பாட்டுக்கு வந்தால் அனைத்து சேவைகளையும் நொடி பொழுதில் பெறலாம். ஏனெனில் 5ஜி சேவையானது 4ஜியை விட 10 மடங்கு வேகத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது வர இருக்கும் மொபைல்களில் 5ஜி நெட்வொர்க் சேவை கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இது தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் 5ஜி சேவையானது 4ஜியை 10 மடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் சென்னையில் ஐஐடியில் 5ஜிக்கான ஆய்வகம் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் 5ஜி சேவையில் வெளியாகும் கதிர்வீச்சின் அளவானது உலக சுகாதார ஆணையம் பரிந்துரைத்த அளவை விட குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 5ஜி சேவைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை (செப்.17) இந்த பகுதிகளில் Power Cut – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
முதற்கட்டமாக நாட்டில் ஒடிசா, சென்னை உட்பட பெரு நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, சண்டிகர் உள்ளிட்ட 13 நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாட்டில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்களின் சேவையின் தரத்தை மேம்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்