சென்னை உட்பட 13 நகரங்களில் 5G நெட்வொர்க் – முக்கிய தகவல் வெளியீடு!

0
சென்னை உட்பட 13 நகரங்களில் 5G நெட்வொர்க் - முக்கிய தகவல் வெளியீடு!
சென்னை உட்பட 13 நகரங்களில் 5G நெட்வொர்க் - முக்கிய தகவல் வெளியீடு!
சென்னை உட்பட 13 நகரங்களில் 5G நெட்வொர்க் – முக்கிய தகவல் வெளியீடு!

நாட்டில் 5ஜி சேவைகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக தொலைத் தொடர்பு இணை மந்திரி தேவசின் சவுகான் மேலும் கூடுதலான தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களை பற்றி பார்ப்போம்.

5G நெட்வொர்க்

இந்திய நாட்டில் தற்போது 4ஜி நெட்வொர்க் சேவைகள் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து 5ஜி அலைக்கற்றையின் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த 5ஜி சேவைகள் பயன்பாட்டுக்கு வந்தால் மொபைல்கள் மற்றும் பிற இணைக்கப்பட்ட சாதனங்களை சிறப்பாக கையாளலாம். அத்துடன் இணைய வசதி பொறுத்தப்பட்ட சாதனங்கள் மற்றும் சேவைகளின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும். இதையடுத்து தற்போது வர இருக்கும் மொபைல்கள் 5ஜி நெட்வொர்க் சேவையுடன் வர உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5ஜி அலைக்கற்றையின் ஏலம் நடைபெற்றது. இதில் ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. இதனை தொடர்ந்து ஏலம் எடுத்துள்ள தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாட்டில் இதுவரை 5ஜி சேவைகள் வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் இந்திய மொபைல் காங்கிரஸ் வருகிற செப்டம்பர் 29ம் தேதி அன்று தொடக்க விழா நடத்த உள்ளது.

ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் வழிமுறைகள் – UIDAI அறிவிப்பு!

இவ்விழாவில் பாரத பிரதமர் மோடி அவர்கள் 5ஜி சேவைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பற்றி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக தொலைத் தொடர்பு இணை மந்திரி தேவசின் சவுகான் கூறியிருப்பதாவது, நாட்டில் இன்னும் 1 மாத காலத்திற்குள் 5ஜி சேவைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர் உள்ளிட்ட 13 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here