இந்தியாவில் 5ஜி இணைய சேவை துவக்கம் – விரைவில் Software அப்டேட்! நிபுணர்கள் தகவல்!

0
இந்தியாவில் 5ஜி இணைய சேவை துவக்கம் - விரைவில் Software அப்டேட்! நிபுணர்கள் தகவல்!
இந்தியாவில் 5ஜி இணைய சேவை துவக்கம் - விரைவில் Software அப்டேட்! நிபுணர்கள் தகவல்!
இந்தியாவில் 5ஜி இணைய சேவை துவக்கம் – விரைவில் Software அப்டேட்! நிபுணர்கள் தகவல்!

இந்தியாவில் கடந்த அக்டோபர் 1ம் தேதி நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் 5ஜி சேவையை தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில் 5ஜி சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.

5ஜி அப்டேட்:

இந்தியாவில் கடந்த ஜூலை 26ம் தேதி 5ஜி சேவை வழங்குவதற்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், Vi உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்று 5ஜி ஏலம் பெற்றனர். இந்த 5ஜியானது 4ஜியை விட 100 மடங்கு அதிவேகத்தில் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த அக்டோபர் 1ம் தேதி நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் இறக்குமதியாகும் எலான் மஸ்க் -ன் மாஸ் திட்டம் – கலங்கும் போட்டி நிறுவனங்கள்!

முதல் கட்டமாக டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது முன்னணி நிறுவனமான ஜியோ தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது. மேலும் 5ஜி வெல்கம் ஆபர்களையும் வழங்கி வருகிறது. மேலும் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. மேலும் ஏர்டெல் சிம் கார்டை மாற்ற தேவையில்லை 4ஜி கட்டணத்திலேயே 5ஜி சேவையை பயன்படுத்தலாம் எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களில் மென்பொருள் அப்டேட் அளிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இதனையடுத்து விரைவில் 5ஜி அதிவேக இணையதள சேவையை அனைத்து மொபைல் போன்களில் அளிக்கும் வகையில் மென்பொருள் அப்டேட் செய்வது பற்றி தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!