தமிழக அரசில் ரூ.58 ஆயிரம் மாத ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.21ம் தேதி கடைசி நாள்!

0
தமிழக அரசில் ரூ.58 ஆயிரம் மாத ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜன.21ம் தேதி கடைசி நாள்!
தமிழக அரசில் ரூ.58 ஆயிரம் மாத ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜன.21ம் தேதி கடைசி நாள்!
தமிழக அரசில் ரூ.58 ஆயிரம் மாத ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.21ம் தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு வேலை:

தமிழகத்தில் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உதவி சுயம்பாகம் பதவியில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்த திருக்கோயில் முறைப்படி நெய்வேத்தியம், பிரசாதம் தயாரிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தட்டச்சர் பதவிக்கு மட்டும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் கீழ்நிலை மற்றும் உயர்நிலை தேர்ச்சி மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கணினி அப்ளிகேஷன் மற்றும் ஆபீஸ் ஆட்டோமேஷன் முடித்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து டிக்கெட் பஞ்சர் பதவியில் காலியாக உள்ள 1 பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சேர்ந்தவராகவும், 01.07.2022 தேதிப்படி 18 வயது பூர்த்தியடைந்த 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் அவசியம்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை – உலக சுகாதார அமைப்பு!

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது திருக்கோயிலுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் அலுவலகம், ஆஞ்சனேயர் கோயில் வளாகம் நாமக்கல் 637001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் ஜன.21ம் தேதி கடைசி நாள். இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/4887/411/document_1.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here