தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது மின்சாரத்துறையில் காலியாக உள்ள 56,000 காலியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

காலியிடங்கள் நியமனம்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி கடந்த மே மாதம் முதல் பதவியில் இருந்து வருகிறது. புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழக அரசு துறைகளில் உள்ள காலியிடங்கள் விரைவில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பல புதிய மற்றும் சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நேற்று தஞ்சாவூரில் அற்புரதப் புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் ஊழியர்களுக்கு 3 போனஸ் – வெளியான சூப்பர் தகவல்!

அப்போது, கடந்த 5 மாத ஆட்சி காலத்தில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் இதுவரை 202 தேர்தல் வாக்குறுதிகள் முழுவதுமக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல், அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கிடுவது தொடர்பாக, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் மற்றும் மின் கணக்கீட்டாளர் பணி நியமனம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் ‘இந்த’ 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தற்போது மின் கணக்கீடு செய்வதற்கு 50% பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக 9 துணை மின் நிலையங்களும், 15 துணை மின் நிலையங்களை தரம் உயர்த்தவும் 163 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியம் 1,59,000 கோடி கடனில் உள்ளது. இதற்காக ஆண்டிற்கு 16,000 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தப்படுகிறது. இவற்றை சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மேலும், மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும், கூடுதலாக அவசர கால பணிகளுக்காக எந்தெந்தப் பணியிடங்கள் தேவையோ அவை நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here