10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 56.49 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!

0
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 56.49 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 56.49 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 56.49 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!

அசாம் மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 7) வெளியாகி இருக்கும் நிலையில், இத்தேர்வில் 56.49 % பேர் தேர்ச்சி பெற்றதாக மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

பொதுத்தேர்வு முடிவுகள்

கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியன்று துவங்கி 31ம் தேதியுடன் முடிவுபெற்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அசாம் மாநில அரசு இன்று (ஜூன் 7) வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து கொரோனா பரவல் சூழல் ஓய்ந்து வந்ததையடுத்து அசாம் மாநிலத்தில், ஆஃப்லைன் முறையில் நடத்தப்பட்ட HSLC தேர்வுகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர். மேலும், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரண்டு ஷிப்டுகளில் தேர்வுகளும் நடத்தப்பட்டன.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு!

அந்த வகையில் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 41,9887 லட்சம் பேர் 10ம் வகுப்பு தேர்வை எழுதி இருந்த நிலையில் அவர்களில் 56.49% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முன்னதாக அசாம் மாநிலத்தில், கடந்த ஆண்டு கொரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஜூலை 30ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

Exams Daily Mobile App Download

இதில் 10 ஆம் வகுப்பு தேர்வர்களுக்கு 40:40:20 என்ற சூத்திரத்தின் அடிப்படையில் இறுதி மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டன. அதாவது, மாணவர்கள் 9 ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் பெற்ற 40% மதிப்பெண்களும், 10 ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற 40% மதிப்பெண்களும், மீதமுள்ள 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை மற்றும் உள் மதிப்பீட்டையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் தொற்று குறைந்திருப்பதால் மீண்டும் ஆப்லைன் முறையில் தேர்வுகளை நடத்திய மாநில பள்ளிக்கல்வித்துறை இப்போது பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here