Citigroup நிறுவனத்தில் 5,500 இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – 2023ம் ஆண்டிற்கு முன் இலக்கு!

0
Citigroup நிறுவனத்தில் 5,500 இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - 2023ம் ஆண்டிற்கு முன் இலக்கு!
Citigroup நிறுவனத்தில் 5,500 இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - 2023ம் ஆண்டிற்கு முன் இலக்கு!
Citigroup நிறுவனத்தில் 5,500 இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – 2023ம் ஆண்டிற்கு முன் இலக்கு!

பன்னாட்டு முதலீட்டு வங்கி நிறுவனமான சிட்டிகுரூப் தனது 2023ம் ஆண்டிற்கு முந்தைய இலக்கை அடைவதற்காக தற்போது ஆசியாவில் இருந்து 5,500 பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்புகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவைக் கழகமான சிட்டிகுரூப் தற்போது ஆசியாவை சேர்ந்த பட்டதாரி இளம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. தொற்றுநோய்க்கு மத்தியில் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக இந்த வேலைவாய்ப்புகள் அமையும் என்று இந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – இரவு நேர ஊரடங்கு அமல்!

இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டுக்குள் 6,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான இலக்கை விட, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் 5,500 இளம் ஊழியர்களை தனது ஆசிய வணிகங்களுக்காக பணியமர்த்தியுள்ளது. இப்போது ஹாங்காங்கை தளமாகக் கொண்ட செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, உலக இளைஞர் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 700 மில்லியன் மக்கள் ஆசியாவில் உள்ளவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, ஆசியாவில் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகை வெறும் 20% மட்டுமே என்றாலும், வேலையில்லாதவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அங்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிட்டிகுரூப் நிறுவனம் ஆசியாவில் சில நுகர்வோர் உரிமையாளர்களுக்கு கஸ்டமர்களை தேடி வருகிறது. ஏனெனில் முதலீட்டு வங்கி போன்ற அதிக லாபம் தரும் யூனிட்களில் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பும் இந்நிறுவனம் ஹாங்காங், லண்டன், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்களில் உள்ள மையங்களில் தனது செல்வ வணிகத்தை மையப்படுத்துகிறது.

1 – 9ம் வகுப்பு வரை இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை | அரசு அதிரடி அறிவிப்பு!

மேலும் Citigroup மற்றும் Citi Foundation ஆகியவை 2020ல் இருந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு ஆதரவாக 24.5 மில்லியன் டாலருக்கும் மேலாக முதலீடு செய்துள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டுக்குள் இப்பகுதியில் உள்ள குறைந்த வருமானம் மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த 35 மில்லியன் டாலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!