திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் – சென்னையிலிருந்து 52 பஸ்கள் இயக்கம்!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் - சென்னையிலிருந்து 52 பஸ்கள் இயக்கம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் - சென்னையிலிருந்து 52 பஸ்கள் இயக்கம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் – சென்னையிலிருந்து 52 பஸ்கள் இயக்கம்!

தமிழகத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இந்நிலையில் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து 52 ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்படுகிறது.

52 பஸ்கள் இயக்கம்:

கொரோனா பாதிப்பால் கடந்த ஒன்றரை வருடங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் இன்றி கோவிலுக்குள் பூஜை நடைபெற்றது. கொரோனா காலகட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, மேலும் பல்வேறு தடுப்பு விதிமுறைகள் மூலம் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் மூலம் குறைவான பக்தர்கள் மட்டுமே கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் மூலம் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதனை தொடர்ந்து ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்கள் மற்றும் கல்யாண உற்சவம் ஸ்ரீவாணி அறக்கட்டளை உள்ளிட்டவைகள் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்று முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கி வருகின்றனர். திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்யும் பகத்தர்களில் மற்ற மாநிலத்தவர்களை தவிர தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – அதிகாரபூர்வ அரசாணை வெளியீடு!

இந்த நிலையில் திருப்பதியில் இருந்து வேலூருக்கு 34 ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் வேலூர் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. இதேபோல் சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து 52 ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று திருப்பதியில் 31,794 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here