தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – 51 வழக்குகள் பதிவு! 75 வாகனங்கள் பறிமுதல்!

0
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் - 51 வழக்குகள் பதிவு! 75 வாகனங்கள் பறிமுதல்!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் - 51 வழக்குகள் பதிவு! 75 வாகனங்கள் பறிமுதல்!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – 51 வழக்குகள் பதிவு! 75 வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு காலத்து விதியை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. அத்துடன் ஓமைக்ரான் பரவல் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் தொற்று பரவல் மேலும் பரவாமல் தடுக்க மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

இந்த நிலையில் இரவு ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் மருத்துவ பணிகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும். இந்த விதியை மீறி செயல்படுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும். அத்துடன் அபராதமும் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

IPL 2022:ராயல் சேலஞ்சர்ஸ் ஏலத்தில் குறிவைக்கும் 2 வீரர்கள் – ஆகாஷ் சோப்ரா பேட்டி!ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அதன்படி நேற்று இரவு நேர ஊரடங்கு நேரத்தில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியவர்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மட்டும் 51 வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 2400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.7,23,000 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.6,000 அபராதம் வசூலிக்கப்பட்டு 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் சென்னை பெருநகர காவல் துறையினர் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here