தமிழகத்தில் இன்று 50000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் இன்று 50000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் இன்று 50000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் இன்று 50000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பரவி வந்த கொரோனா நோய் தொற்று மக்களை மிகவும் கடுமையாக பாதித்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தொற்று குறையத் தொடங்கியது. மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் நோய் பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது.

தமிழகத்தில் நாளை (செப்.05) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!

இதனை தொடர்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்க தொடங்கியது. இந்த நிலையில் தடுப்பூசி போடுவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி போட்டு இருப்பவர்களை மட்டுமே வேலைகளில் அனுமதிக்க வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்தது. இருப்பினும் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் அரசு தடுப்பூசி செலுத்துவதை அறிவுறுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் 34 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று 35 வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இன்று தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், இதில் சென்னையில் மட்டும் 2000 இடங்களில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காக அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதாவது, செப்டெம்பர் 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!