தமிழக பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

0
தமிழக பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தமிழக பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தமிழக பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் பொதுப்பணி துறையில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொதுப்பணித்துறை வேலை:

தமிழக அரசு துறைகளில் ஒன்றான பொதுப்பணி துறையில் ஊழியர்கள் நேரடி நியமனம் முறையில் பணி வரன்முறை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுப்பணி துறையில் பல்வேறு பதவிகளில் ஏற்பட்டுள்ள 500 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜனவரி 27 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? மாநகராட்சி நிர்வாகம் முடிவு!

இந்த பயிற்சி பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணி: இன்ஜினியரிங் அப்பரண்டிஸ்

காலியிடங்கள்: 340

சிவில்: 306

எலெக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்: 34

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பதவிக்கு தகுந்தாற்போல் BE சிவில் அல்லது எலெக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.9,000

பணி: டிப்ளமோ அப்ரண்டிஸ்

காலியிடங்கள்: 160

சிவில்: 144

எலெக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்: 16

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பதவிக்கு தகுந்தாற்போல் டிப்ளமோ சிவில் அல்லது எலெக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.8,000

வயது வரம்பு: 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுகளில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணிகளுக்கு அவரவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  http://boat-srp.com/ அல்லது http://www.mhrdnats.gov.in/  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.01.2022

இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_PWD_2021-22.pdf  என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here