தமிழகத்தில் புதியதாக 500 மின்சார பேருந்துகள்? சோதனைகள் தீவிரம்!

1
தமிழகத்தில் புதியதாக 500 மின்சார பேருந்துகள்? சோதனைகள் தீவிரம்!
தமிழகத்தில் புதியதாக 500 மின்சார பேருந்துகள்? சோதனைகள் தீவிரம்!
தமிழகத்தில் புதியதாக 500 மின்சார பேருந்துகள்? சோதனைகள் தீவிரம்!

தமிழகத்தில் புதியதாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான சோதனைகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மின்சார பேருந்துகள்:

தமிழகத்தில் பெண்களின் தினசரி போக்குவரத்தை எளிமையாக்கும் விதமாக தமிழக அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த மகளிர் இலவச பேருந்துகளை ஒரு சில ஓட்டுனர்கள் சரியாக நிறுத்தங்களில் நிறுத்துவது இல்லை என்றும், நடத்துனர்கள் முறையாக நடந்து கொள்வதில்லை என்றும் புகார்கள் தமிழக அரசிடம் பெறப்பட்டது. இதனால் தமிழக அரசு மகளிர் இலவச பேருந்துகளில் இது போன்ற புகார்கள் மீண்டும் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

மேலும், இலவச பேருந்துகளை பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், முன்னதாக பேருந்தின் முன் மற்றும் பின் பக்கங்களில் மட்டும் பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது. ஆனால், சில நாட்களில் படிப்படியாக பேருந்தின் அனைத்து பக்கங்களிலும் பிங்க் நிற வண்ணம் கொண்ட பெயிண்ட் அடிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

நாட்டை உலுக்கும் மற்றொரு புதிய வகை வைரஸ் தொற்று – சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

அப்போது, சென்னையில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளதாகவும், இந்த நடைமுறைக்கு முன்னதாக 100 பேருந்துகளை மட்டும் வாங்கி சென்னையில் சோதனை முறையில் இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சோதனை முறை வெற்றி அடைந்த பின்னர் தமிழகம் முழுவதும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன்பிறகு அனைத்து பகுதி பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!