தமிழக ரேஷன் அட்டைத்தார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – 500 கோடி ரூபாய் ஊழல்!

0
தமிழக ரேஷன் அட்டைத்தார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - 500 கோடி ரூபாய் ஊழல்!
தமிழக ரேஷன் அட்டைத்தார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - 500 கோடி ரூபாய் ஊழல்!
தமிழக ரேஷன் அட்டைத்தார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – 500 கோடி ரூபாய் ஊழல்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

தமிழகத்தில் மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் இலவச வேட்டி, சேலை, கரும்பு போன்ற பொருட்கள் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசுத் தொகையும் வழங்கப்படும். அதே போல 2022ம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய பொருள்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

TCS, Infosys, Wipro, HCL Tech ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவிற்கு வரும் Work From Home?

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் அட்டைதாரர்களுக்கு தினமும் 200 குடும்பங்கள் வீதம் டோக்கன் அடிப்படையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அரிசி வெல்லம் போன்ற பொருட்கள் மக்கள் பயன்படுத்தும் பக்குவத்தில் இல்லை. அரிசி தரமற்று இருந்ததாகவும், வெல்லம் உருகிய நிலையில் இருந்ததாவும் கூறுகின்றனர்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்!

இந்த நிலையில் எதிர்க்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலியில் நகர்புற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசிய அவர், தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாகவும், அனைத்து நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தனர் ஆனால் இந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!