தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க பிப்.14 கடைசி நாள்!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க பிப்.14 கடைசி நாள்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க பிப்.14 கடைசி நாள்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க பிப்.14 கடைசி நாள்!

தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர், சுருக்கெழுத்தர் மற்றும் வரவேற்பாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசில் வேலை:

தமிழகத்தில் காரைக்குடியில் அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சிலிங் கீழ் இயங்கி வரும் மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதாவது மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariate Assistant), இளநிலை சுருக்கெழுத்தர் (Junior Stenographer) மற்றும் வரவேற்பாளர்(Receptionist) உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 14 பணியிடங்களை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இளநிலை செயலக உதவியாளர் பணிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்? ஜனவரி 21ம் தேதி முடிவு!

இளநிலை சுருக்கெழுத்தர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்று 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் வரவேற்பாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளநிலை தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் வரவேற்பாளராக பணியாற்றிய அனுபவம் வேண்டும். வயது வரம்பு 14.02.2022 தேதிப்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.28,000 முதல் ரூ.50,000 வரை பதவிகளுக்கு தகுந்தாற்போல் ஊதியம் வழங்கப்பட்டும். இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 3 சதவீதம் உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://jsarecruit.cecri.res.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனை பிரிண்ட் எடுத்து The Controller of Administration, CSIR–Central Electrochemical Research Institute, Karaikudi – 630003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் போது பொது பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC, ST, PWBD பிரிவிற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க பிப்.14ம் தேதி கடைசி நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://jsarecruit.cecri.res.in/uploads/advt/01-2022-Advertisement.pdf என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!