தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது பணியிடங்கள், கல்வித்தகுதி, சம்பளம் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் TNPSC தேர்வுகளின் ஆண்டு அறிக்கையை தேர்வாணையம் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைகளை பொருத்தும் அதற்கேற்றவாறு இந்த குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 5831 காலிப்பணியிடங்களை கொண்டுள்ள குரூப் 2,2A தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குரூப்4&VAO தேர்வுக்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அரசாணை வெளியீடு!

மேலும் தேர்வுக்கு ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் வாகன சீராளர் பதவிகளில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வாகனம் சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருப்பதுடன் நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ExamsDaily Mobile App Download

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் cuddalore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கடலூர் – 607 001 என்ற அஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் 29ம் தேதிக்குள்அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here