கொரோனாவால் உயிரிழந்தோருக்கு 50,000 ரூபாய் நிவாரணம் – மத்திய அரசு!

0
கொரோனாவால் உயிரிழந்தோருக்கு 50,000 ரூபாய் நிவாரணம் - மத்திய அரசு!
கொரோனாவால் உயிரிழந்தோருக்கு 50,000 ரூபாய் நிவாரணம் - மத்திய அரசு!
கொரோனாவால் உயிரிழந்தோருக்கு 50,000 ரூபாய் நிவாரணம் – மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் இழப்பீடு தொகையாக ரூ.50,000 அளிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நிவாரணம்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியாவில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,46,050 ஆக உள்ளது. கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையால் உயிரிழப்புகள் அதிகமாக பதிவாகியது. நடுத்தர வயதினர் வரை வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வந்தனர். இதனால் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

தமிழகத்தில் யார் யாருக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் பேட்டி!

இன்னும் சிலர் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த வழிகாட்டுதல்களை பரிந்துரைக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மைக்கு உத்தரவிட்டது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது.

Atos IT நிறுவனத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு! விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ரூபாய் 50,000 நிவாரணத் தொகையாக வழங்க பரிந்துரைத்துள்ளது. மாநில அரசுகள் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 30 நாட்களுக்கும் நிவாரண தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!