தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 மற்றும் தங்கப் பதக்கம் – அக்.30 கடைசி நாள்!
தமிழக அரசு சார்பாக தூய தமிழ் சொற்களை பயன்படுத்தி கவிதை புனையும் படைப்பாளர்களை ஊக்குவிக்க விருதுகள் வழங்கப்படும். இந்த நற்றமிழ் பாவலர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நற்றமிழ் பாவலர் விருது:
தமிழக அரசு ஆண்டுதோறும் தமிழுக்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதே போல் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்கள், விஞ்ஞானம், அறிவியல், பொது சேவை என தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தமிழ் மொழி மீது கொண்ட பற்றினை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழியுடன் பிற மொழி கலக்காது கவிதை புனையும் எழுத்தாளர்களுக்கும் விருது வழங்கப்படும்.
தமிழகத்தில் செப்டம்பர் மாதம் தியேட்டர்கள் திறப்பு? திரையுலகினர் எதிர்பார்ப்பு!
அது போன்று தூய தமிழ் சொற்களை கொண்டு கவிதை புனையும் படைப்பாளர்களுக்கு நற்றமிழ் பாவலர் விருது வழங்கப்படும். இதுபோன்ற நல்ல சொற்களை பயன்படுத்தி உருவாக்கும் கவிதையில் உள்ள சொற்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும். அதே போல் தங்கள் படைப்பில் தூய, புதிய தமிழ் சொற்களையும் பயன்படுத்தும் பாவலர்கள் இருவருக்கு நற்றமிழ் பாவலர் விருது வழங்கப்பட இருக்கிறது.
TN Job “FB
Group” Join Now
மேலும் இதனுடன் தங்க பதக்கமும் 50,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் அகரமுதலி சார்பில் வழங்கப்படும் நற்றமிழ் பாவலர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சொற்குவை.காம் என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே பாவலர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தூய தமிழ் சொற்களை மட்டும் பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கு சான்றாக கடைசியாக வெளிவந்த கவிதை நூல்களின் பிரதியையும் அனுப்பும்படி குறிப்பிடப்பட்டு உள்ளது.