அரசு பேருந்தில் மகளிருக்கு 50% கட்டண சலுகை – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

0
அரசு பேருந்தில் மகளிருக்கு 50% கட்டண சலுகை - மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!
அரசு பேருந்தில் மகளிருக்கு 50% கட்டண சலுகை - மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!
அரசு பேருந்தில் மகளிருக்கு 50% கட்டண சலுகை – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

கொரோனா வருகைக்கு பின்னர், இந்தியா அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. அதனால் மாநில அரசுகள், அம்மாநில மக்களுக்கு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசின் பேருந்து போக்குவரத்தில் பெண்களுக்கான கட்டணத்தை 50 சதவிகிதம் குறைத்து அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சூப்பர் அறிவிப்பு:

ஹிமாச்சலப் பிரதேச மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள செளகானில் இன்று 75 வது ஹிமாச்சல் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மாநில பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு உதவும் வகையில் பெண்களுக்கான பேருந்து கட்டணம் 50 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் ரூ.60 கோடி, பெண்களுக்கு மிச்சமாகும் என கூறினார்.

Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இதை உடனே பண்ணுங்க!

இதையடுத்து 125 யூனிட் வரை மின்சாரத்தை நுகரும் பயனாளிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, இதன்மூலம் 11.5 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்தார். இந்த வகையில் ரூ.250 கோடி வரை மக்களின் செலவு மிச்சமாகும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முக்கிய வாக்குறுதியாக, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு படி, வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 23 நேர்காணல்!

நடப்பாண்டு இறுதியில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசின் அறிவிப்புகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மக்களுக்கு எந்த வசதியையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. ஆம் ஆத்மிக்கு அச்சப்பட்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டங்களை பாஜக காப்பி அடித்து உள்ளது என விமர்சித்தார். ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!