சம்பளத்தில் 50% வேலையின்மை உதவித்தொகை திட்டம் – கால அவகாசம் நீட்டிப்பு!

0
சம்பளத்தில் 50% வேலையின்மை உதவித்தொகை திட்டம் - கால அவகாசம் நீட்டிப்பு!
சம்பளத்தில் 50% வேலையின்மை உதவித்தொகை திட்டம் - கால அவகாசம் நீட்டிப்பு!
சம்பளத்தில் 50% வேலையின்மை உதவித்தொகை திட்டம் – கால அவகாசம் நீட்டிப்பு!

கொரோனா பெருந்தொற்றினால் தங்களின் வேலைவாய்ப்பினை இழந்துள்ளவர்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட ‘அடல் பிமிட் வைக்தி கல்யாண் யோஜனா’ திட்டம் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலையின்மை உதவித்தொகை:

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பல அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டது. இதனால் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. கொரோனா தொற்று காலத்தில் இது போன்ற காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ‘அடல் பீமித் வைக்தி கல்யாண் யோஜனா’ என்ற திட்டம் முன்னதாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தங்கள் ஊதியத்தில் 50% வரை பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.50,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர். ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) இந்த திட்டத்தை நடத்துகிறது.

PF பயனர்கள் கவனத்திற்கு – வேலைகளை மாற்றும் போது EPF கணக்கை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

வேலையில்லாத நபர் 3 மாதங்களுக்கு இந்த உதவித்தொகையினை பெறலாம். வேலை பறிபோன 30 நாட்களுக்கு பிறகு இந்த திட்டத்தில் பயனடைய அனைத்து ESIC கிளைகளிலும் விண்ணப்பிக்கலாம். முன்னதாக, இந்தத் திட்டம் 30 ஜூன் 2021 வரை இருந்தது. ஆனால் தற்போது மேலும், 30 ஜூன் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான நடவடிக்கையின் காரணமாக மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில் பலனடையலாம்.

திட்டத்திற்கு தகுதியானவர்கள்:

  • அடல் பீமிட் வைக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் பயனை ஒவ்வொரு மாதமும் PF / ESI நடைமுறை உள்ள தனியார் துறையில் பணியாற்றிய மக்களால் பெற முடியும்.
  • தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இஎஸ்ஐயின் நன்மை கிடைக்கும். இதற்காக, ஒரு இஎஸ்ஐ கார்டு தயாரிக்கப்படுகிறது.
  • ஊழியர்கள் இந்த அட்டையின் அடிப்படையில் அல்லது நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாதாந்திர வருமானம் ரூ .21,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ள ஊழியர்களுக்கு ESI இன் நன்மை கிடைக்கும்.

திட்டத்திற்கு பதிவு செய்யும் முறை:

அடல் பீமிட் வைக்தி கல்யாண் யோஜனா திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் முதலில் ESIC அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

படிவத்தை பூர்த்தி செய்து ESIC.3 -ன் அருகில் உள்ள கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன், ரூ.20 மதிப்புள்ள நீதித்துறை அல்லாத முத்திரைத் தாளில் ஒரு நோட்டரியின் உறுதிபடுத்தலுடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here