50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 26% ஆக அதிகரிப்பு? முழு விவரம் இதோ!

0
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 26% ஆக அதிகரிப்பு? முழு விவரம் இதோ!
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 26% ஆக அதிகரிப்பு? முழு விவரம் இதோ!
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 26% ஆக அதிகரிப்பு? முழு விவரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி (DA) உயர்வுத்தொகையுடன் HRA மற்றும் TA போன்றவற்றை உயர்த்தி வழங்கிய மத்திய அரசு, இப்போது புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மேலும் ஒரு சலுகையை கொடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

ஊதிய உயர்வு

மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, பிட்மென்ட் காரணி, குறைந்தபட்ச ஊதியம் அல்லது அடிப்படை சம்பளம் போன்றவற்றில் கூடுதல் உயர்வு கொடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுத்தொகை 31% மாக உயர்த்தி அறிவிக்கப்பட்டதையடுத்து, பிட்மென்ட் காரணியை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

டிசம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI பட்டியல் வெளியீடு! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்த ஊதிய உயர்வு தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்ய இருப்பதாகவும், 2022 யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் இந்த முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இப்போது மத்திய அமைச்சரவையில் இருந்து இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டவுடன் வரவிருக்கும் பட்ஜெட் செலவில் இந்த அதிகரிப்பு சேர்க்கப்படும். இந்த நடவடிக்கையானது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிட்மென்ட் காரணியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் குறைந்தபட்ச ஊதியத்தையும் உயர்த்தும்.

திருப்பூரில் நவ.30 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 100+ நிறுவனங்கள் பங்கேற்பு!

தற்போது, அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 சதவீத பிட்மென்ட் காரணியில் கணக்கிடப்படுகிறது. இப்போது முன்மொழியப்பட்ட 3.68 சதவீத பிட்மென்ட் காரணிக்கு அரசு ஒப்புக்கொண்டால், அடிப்படை சம்பளம் ரூ.8000 அதிகரித்து ரூ.26,000 என்ற நிலையை எட்டும். இந்த ஊதிய உயர்வு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் சலுகையை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நிலுவையில் உள்ள DA தொகையை அளிப்பதற்கு இறுதி முடிவை எடுப்பதற்காக ஊழியர் பிரதிநிதி அமைப்புடன் அரசாங்கம் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!