தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 – வேட்பாளரின் அருமையான வாக்குறுதி!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 - வேட்பாளரின் அருமையான வாக்குறுதி!
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 - வேட்பாளரின் அருமையான வாக்குறுதி!
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 – வேட்பாளரின் அருமையான வாக்குறுதி!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிரச்சாரங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பிரச்சாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வேட்பாளர்கள் அறிவித்து வருகின்றனர்.

வாக்குறுதிகள்

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – UPI PIN பயன்பாடு! மோசடி எச்சரிக்கை!

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி சார்பில் பல்வேறு பொது கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடைபெறும். இந்த பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் மக்களுக்காக சிறப்பான வாக்குறுதிகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் வேட்பாளர்கள் வாக்காளர்களின் மனதில் இடம்பிடிக்கும் வகையில் நேரில் சந்தித்தி சால்வை அணிவித்து ஓட்டு கேட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு பகுதிகளில் பிரச்சாரங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரங்கத்தில் பாமக சார்பில் கலந்து கொண்டார். இதில் அவர் தெரிவித்ததாவது, தான் ஆட்சி அமைத்தால், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் 14, 21 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாணவர்களை கவரும் வகையில் கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்ட்ம்ப் போன்ற பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் இன்றுடன் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளதால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here