Reliance Jio வெளியிட்ட ஷாக் அறிவிப்பு – 5 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது திடீர் விலை உயர்வு!

0
Reliance Jio வெளியிட்ட ஷாக் அறிவிப்பு - 5 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது திடீர் விலை உயர்வு!
Reliance Jio வெளியிட்ட ஷாக் அறிவிப்பு - 5 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது திடீர் விலை உயர்வு!
Reliance Jio வெளியிட்ட ஷாக் அறிவிப்பு – 5 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது திடீர் விலை உயர்வு!

தற்போது இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான Reliance Jio நிறுவனம் தற்போது 5 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திருத்தியுள்ளது. இந்த 5 விதமான ப்ரீபெய்ட் திட்டங்களும் ஒரு வருட சந்தாவை வழங்கும்படி செய்துள்ளது.

5 ப்ரீபெய்ட் திட்டங்கள் விலை உயர்வு

கடந்த நாட்களில் Airtel மற்றும் vodafone நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களில் விலை உயர்வை அறிவித்தது. தற்போது Reliance Jio நிறுவனமும் அதன் ரீசார்ஜ் திட்டங்களில் விலை உயர்வை 20% அதிகரித்துள்ளது. அதில் 5 ரீசார்ஜ் திட்டங்களும் முறையாக சேர்க்கப்படவில்லை. அவைகளாவன ரூ.499, ரூ.549, ரூ.666, ரூ.888, ரூ.2599 இந்த 5 ப்ரீபெய்ட் திட்டங்களும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வருடாந்திர சந்தாவை வழங்கும். இந்நிலையில் தற்போது இந்த 5 ப்ரீபெய்ட் திட்டங்களும் 20% விலை உயர்வு பெற்றுள்ளது என்று Reliance Jio தெரிவித்துள்ளது.அதன்படி ப்ரீபெய்ட் திட்டமான ரூ.499 என்பது தற்போது ரூ.601 என உயர்ந்துள்ளது. இத்திட்டம் மூலம் 3ஜிபி அதிவேக டேட்டாவை 28 நாட்களுக்கு பெற முடியும் மற்றும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை பெற முடியும்.

மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!

இந்தத் திட்டம் கூடுதலாக 6ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. அதை தொடர்ந்து அடுத்தபடியாக டேட்டா ஒன்லி பேக் ஆன ரூ.549 திட்டத்திலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தற்போது ரூ.659 க்கு கிடைக்கும். இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. மேலும் தினமும் 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி மொத்தம் 56 நாட்களுக்கு வழங்குகிறது. இதையடுத்து ப்ரீபெய்ட் திட்டமான ரூ.666 என்பது தற்போது ரூ.799 என உயர்ந்துள்ளது. இது வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் செல்லுபடியாகும். இதன் வேலிடிட்டி நாட்கள் 56 நாட்கள் ஆகும். தினமும் 2ஜிபி அதிவேக டேட்டாவை பெற முடியும். இந்தத் திட்டத்தில் வருடாந்திர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவையும் பெற முடியும்.

தமிழகத்தின் இம்மாவட்ட பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – 11ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி!

இதையடுத்து ப்ரீபெய்ட் திட்டமான ரூ.888 என்பது தற்போது ரூ.1066 என உயர்ந்துள்ளது. இந்த திட்டம் மூலம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலின் வருடாந்திர சந்தாவை பெற முடியும் மேலும் தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் கூடுதலாக 5 ஜிபி டேட்டாவையும் பெற முடியும். அத்துடன் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பெற முடியும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதனை தொடர்ந்து ப்ரீபெய்ட் திட்டமான ரூ.2599 என்பது தற்போது ரூ.3119 என உயர்ந்துள்ளது. இத்திட்டம் மூலம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா சேவையை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. மேலும் 2ஜிபி தினமும் மற்றும் 10 ஜிபி கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி நாட்கள் மொத்த 365 நாட்களுக்கும் செயல்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!