தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி உடையோர் பட்டியல் வெளியீடு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - தகுதி உடையோர் பட்டியல் வெளியீடு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - தகுதி உடையோர் பட்டியல் வெளியீடு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி உடையோர் பட்டியல் வெளியீடு!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன்கால் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான அரசாணையில் தள்ளுபடிக்கு தகுதியான சில நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகளை அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்துள்ள அரசு, இந்த சலுகை யார் யாருக்கெல்லம் கிடைக்கும் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நிபந்தனைகள் தொடர்பான அறிவிப்புகளும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகளில் 11,000 காலிப்பணியிடங்கள் – முழு விபரங்கள் இதோ!

இப்போது கடன் தள்ளுபடி சலுகையை பெறுவதற்கு கீழ்காணும் நிபந்தனைகளை பெற்றிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, தமிழக அரசின் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், ஒன்று அல்லது பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் 40 கிராமுக்கு உட்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொது நகைக்கடன்களை பெற்றிருந்தால் மற்ற தகுதிகளுக்கு உட்பட்டு அந்த கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

ஒரு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்கள், 31.03.2021 வரையில் ஒரு பவுனுக்கு அதிகமாக இல்லாத நகைகளுக்கு பெற்ற நகைக்கடன்களில் பகுதியாக செலுத்தியது போக அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள பொதுக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். மேலும் பொது நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கு இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2021 தேதி வரை பெற்ற நகைக்கடன்களில் பகுதியாக செலுத்தியது போக மீதமிருக்கும் நிலுவைத்தொகை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தொடர்ந்து 31.03.2021 தேதி வரை நகைக்கடன் கணக்கில் நிலுவை இருந்து, அரசாணை வெளியிடப்படும் நாள் வரையும் கடன் தொகை பகுதியாக செலுத்தப்பட்டிருந்தால் அந்த தொகை நீங்கலாக மீதமிருக்கும் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். அதுவும் இந்த பட்டியலில் இருக்கும் மற்ற தகுதிகளை உடையவர்களது கடன் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். ஆதார் அடிப்படையில், குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தகுதிக்குட்பட்டு தள்ளுபடி செய்யப்படும்.

டிசம்பர் 20 வரை 8 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களும் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் தொகை பெற்றிருந்தால் அந்த தொகையும் ரத்து செய்யப்படும். குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று தற்போது வரை செல்லுபடியாகக்கூடிய குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே நகைக்கடன்களை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் ஆவர் என அரசு வெளியிட்டுள்ள கடன்தொகை நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!