தமிழகத்தில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை வெளியீடு!

0
தமிழகத்தில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிவிப்பு - கூட்டுறவுத்துறை வெளியீடு!
தமிழகத்தில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிவிப்பு - கூட்டுறவுத்துறை வெளியீடு!
தமிழகத்தில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை வெளியீடு!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக, துணை பதிவாளர் தலைமையில் குழு அமைத்து தகுதியுள்ள மற்றும் தகுதி இல்லாத நபர்கள் அடையாளம் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக கூட்டுறவு வங்கிகளில் அரசு தரப்பில் ஆய்வுகளை மேற்கொண்ட போது, நகைக்கடன்களில் பல்வேறு மோசடி நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதனால், தகுதியுடையவர்களுக்கு மட்டுமே 5 சவரன் நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அரசு விளக்கம் கொடுத்தது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வனிதா விஜயகுமார் எப்படிப்பட்டவர்? அவரது மகளே சொன்ன தகவல்!

இந்நிலையில் நகைக்கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக தகுதியுள்ள மற்றும் தகுதி இல்லாத நபர்களை அடையாளம் காணும் பணியை அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான பட்டியலை தயார் செய்ய ஒரு துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவானது மாவட்ட வாரியாக உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சேமித்து தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என 2 பட்டியலை வரும் பிப்ரவரி 11ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2023 முதல் மகளிர் ஐபிஎல் தொடர் – BCCI தலைவர் கங்குலி அறிவிப்பு!

இது தவிர கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகைக்கு குறைவாக நகைக்கடன் பெற்றுள்ளவர்களுக்கு மட்டும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதே நேரத்தில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றவர்கள் மற்றும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் இந்த தள்ளுபடியை பெற தகுதியற்றவர்கள் என அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது துணை பதிவாளர் குழுவின் பட்டியல் கூட்டுறவு சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நகை கடன் நிராகரிப்பு சான்று தேர்தல் முடிந்ததும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here