தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் காசோலையுடன் கல்பனா சாவ்லா விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் காசோலையுடன் கல்பனா சாவ்லா விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் காசோலையுடன் கல்பனா சாவ்லா விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் காசோலையுடன் கல்பனா சாவ்லா விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் துணிவு, வீர சாகச செயல்களுக்காக வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. பெண்கள் மட்டுமே இவ்விருது பெற தகுதியானவர்கள் ஆவர்.

கல்பனா சாவ்லா விருது:

இந்தியாவில் அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் பிறந்து விண்வெளிக்கு சென்று சாதனை படைத்தவர் கல்பனா சாவ்லா. இவர் கொலம்பியா விண்வெளி ஊர்தியின் பயணம் செய்ய 6 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளி பயணத்தில் 10.67 மில்லியன் கிலோமீட்டர் பயணித்து வெற்றி பெற்றார். நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக கொலம்பியா விண்கலத்தில் பயணித்த இவர் ஆய்வை முடித்து வெற்றிகரமாக திரும்பி வரும் வேளையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் விண்கலம் விபத்திற்கு ஆளானது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அதிரடி உயர்வு – சூப்பர் அறிவிப்பு!

கல்பனா சாவ்லா உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாதாரண அரசு பள்ளியில் சேர்ந்து தனது உழைப்பால் நாசாவில் சேர்ந்து பல ஆராய்ச்சிகளை நடத்தியவர் கல்பனா. இவரை நினைவூட்டும் விதமாக தமிழகத்தில் ஆண்டுதோறும் துணிவு, திறமை மற்றும் வீர சாகசச் செயல்களை புரியும் பெண்களை பாராட்டி கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்வர் அவர்கள் வழங்குவர். இவ்விருதுடன் 5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

தற்போது 2022ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. துணிச்சலான வீர சாகச செயல் புரிந்த பெண்கள் http://awards.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உடையவர்கள் நேரடியாக தனது விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009 என்ற முகவரிக்கு ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!