Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – ரூ.34 முதல் முதலீடு! ரூ.5.32 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

0
Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் - ரூ.34 முதல் முதலீடு! ரூ.5.32 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் - ரூ.34 முதல் முதலீடு! ரூ.5.32 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – ரூ.34 முதல் முதலீடு! ரூ.5.32 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் பணத்திற்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிக சிறந்த வழியாகும்.

பொது வருங்கால வைப்பு நிதி

கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றன. அதனால் பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக தங்கள் முதலீடுகளை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் தங்கள் பணத்தை செலுத்த தொடங்கின. மேலும் அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அதிலும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதற்கு வழி வகை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன.

தடுப்பூசி போடாதவர்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!

மேலும் ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையைச் சேமித்து அதனை நீண்ட கால அடிப்படையில் சேமித்து வைத்துக் கொண்டால் மிகப் பெரிய லாபத்தை ஈட்ட PPF சேமிப்பு பெரிதும் உதவியாக உள்ளது. போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் இந்த திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஆண்டுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

WhatsApp இல் வரப்போகும் சூப்பர் அப்டேட் – தவறாக அப்டேட் ஆன ஸ்டேட்டஸை உடனே நீக்கலாம்!

மேலும் ஒரே தவணையில் 1.50 லட்சம் செலுத்த முடியாவிட்டால் மாதம் 12500 ரூபாய் செலுத்தலாம். இந்த திட்டம் நீண்டகாலம் பணத்தை சேமிக்க நினைப்போருக்கு சிறந்த திட்டமாகும். PPF திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும். தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீட்டித்துக் கொள்ளலாம். அத்துடன் குறைந்தது தினமும் ரூ.34 சேமித்தால் மாதத்திற்கு ரூ.1054 முதல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதன் பின் 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் சேமிக்கும் தொகை ரூ.1.80 லட்சம் மேலும் வட்டியுடன் 3.25 லட்சம் கிடைக்கிறது. மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டால் ரூ.5.32 லட்சம் கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!